வீழ்ந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க அடுத்த கட்டமாக சீனாவிடம் உதவியினை இலங்கை அரசாங்கம் கோரவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வருடம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீன வங்கிக்கு மீள செலுத்த வேண்டிய கடன் உள்ளது. அதனை பொருளாதார நிலைமை சீராகியதன் பின்னர் செலுத்துவதற்கு கால அவகாசம் கோருவதும், உள்ளூர் உற்பத்திகளுக்கான தயாரிப்பு பொருட்களை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்வதற்குமான உதவிகளை கோரவுள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் இவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்கும் சந்தர்ப்பத்தில் அதனை உறுதி செய்வதாக சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடம் 1 பில்லியன் டொலர்களை அத்தியாவசிய தேவைக்கான கடனாக வாங்குவதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளன. 500 மில்லியன் டொலர்களுக்கான எரிபொருள் இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வர ஆரம்பித்து விட்டது. இவ்வாறான நிலையில் இலங்கையின் இன்னுமொரு நட்பு நாடான சீனாவிடம் இலங்கை உதவி நோக்கி நகர்கிறது.