நிட்டம்புவ பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காயமடைந்த மூவர் நிட்டம்புவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகொரலவின் வாகனம் சேதமாக்கப்பட்டுள்ளது.
அவருடைய வாகனத்தில் சென்றவர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருக்கலாமென சந்தேகம் எழுந்துள்ளது. அந்த வாகனம் நிட்டம்புவ மக்களினால் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதுள்ளது. அந்த வாகனத்தில் இருந்து ஏராளாமான சாராய போத்தல்கள் மற்றும் துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.