இதுவரை 6,000 வீடுகள் கையளிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மீள்குடியேற்ற அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட விரைவான மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் இதுவரை 6,000 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடக்கு – கிழக்கு மீள்குடியேற்றத்தின் நடவடிக்கைகளுக்கான அரசாங்கத்தின் இணைப்பாளர் கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

விரைவான மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ், 2021ஆம் ஆண்டிற்கான வடகிழக்கில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கு 6000 வீடுகளை அமைத்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து, எதிர்வரும் 2022ஆம் ஆண்டுக்குள் வடகிழக்கில் மீதமுள்ள அனைத்து இடம்பெயர்ந்தோர் முகாம்களையும் மூடுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுவரை 6,000 வீடுகள் கையளிப்பு

Social Share

Leave a Reply