61 எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய ஒப்பந்தம்

லங்கா இந்தியன் ஒயில் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து திருகோணமலை எண்ணெய் பண்ணையில் 61 எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்யவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (31/12) தெரிவித்தார்.

அதன்படி 61 எண்ணெய் தாங்கிகளையும் டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் நிர்வகிக்கும் என அமைச்சர் கூறினார்.

டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட்டில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 51 சதவீத பங்குகளை வகிப்பதுடன், லங்கா இந்தியன் ஒயில் கூட்டுத்தாபனம் 49 சதவீத பங்குகளை வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து 14 எண்ணெய் தாங்கிகளின் குத்தகை மேலும் 50 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படவுள்ளதாகவும், திருகோணமலை எண்ணெய்ப் பண்ணையில் உள்ள 99 எண்ணெய் தாங்கிகளில் 85 எண்ணெய் தாங்கிகளின் முழு கட்டுப்பாட்டில் இலங்கை இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையும் இந்தியாவும் சுமார் 16 மாதங்களாக இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு கையொப்பமிடப்பட்டவுடன், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் திட்டமிடப்பட்ட ஒரு முன்மொழி நடைமுறைக்கு வரும் என அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

61 எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய ஒப்பந்தம்

Social Share

Leave a Reply