இந்தியா – சென்னையில் வீதிகளில் முகக்கவசம் அணியாமல் திரிந்தவர்களை அவதானித்து, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாகனத்தை விட்டு இறங்கி யாரும் எதிர்பாராத விதமாக முகக்கவசங்களை வழங்கினார்.
இச்செயற்பாடு அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை – அண்ணாசாலையில் முகக்கவசம் அணியாமல் இருந்த பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், முகக்கவசங்களையும் வழங்கி வைத்தார்.
தமிழ் நாட்டில் ஒமிக்ரொன் அபாயம் காணப்படும் நிலையில், சென்னையில் 40 சதவீதமானவர்கள் மாத்திரமே முகக்கவசங்களை அணிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முகக்கவசம் அணியாதவர்களிடம் தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான் இன்று (04/01) சென்னை – அண்ணாசாலையில் வைத்து காரில் பயணித்துக் கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின் வீதியில் இறங்கி முகக்கவசங்களை வழங்கியதுடன், தனது கையால் அவற்றை அணிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின், இந்த செயல் அங்கிருந்த மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன், மக்களுக்கு முகக்கவசம் அணிவிக்கும் வீடியோ தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.