வவுனியா பல்கலைகழகம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார் வீதிபம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைகழகத்தில் இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷநினைவுக்கல்லை திரை நீக்கம் செய்து பல்கலைகழகத்தை ஆரம்பித்து வைத்தார். கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வன்னி பாராளுமன்றஉறுப்பினர்களான குலசிங்கம் திலீபன், காதர் மஸ்தான் உட்பட பலர் இந்த ஆரம்ப நிகழ்விலகலந்துகொண்டனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் வவுனியா வளாகம் , வவுனியா பல்கலைகழகம் என பெயர் மாற்றம்செய்யப்பட்டது. கொரோனா காரணமாக ஆரம்ப நிகழ்வுகள் பிற்போடப்பட்ட நிலையில் இன்று ஆரம்ப நிகழ்வுநடைபெற்றது. பல்கலைகழகத்தின் உப வேந்தராக மங்களேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். முகாமைத்து கற்கை நெறி, கணிதவிஞ்ஞான துறைகள், தகவல் தொழில்நுட்ப கற்கைநெறிகள் தற்போது இங்கே காணப்படுகின்றன. எதிர்காலத்தில் மருத்துவ பீடமும் ஆரம்பிக்கப்படும் வாய்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Social Share
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed