மின்தடைக்கு கடந்த அரசே காரணம் -நாமல்

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் அதிகமான மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் ஒரு மெகா வோட் மின்சக்தியினை கூட தேசிய மின் இணைப்புகள் உள் வாங்கவில்லையென விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மின்தடைக்கு இதுவும் முக்கிய காரணம் என தெரிவித்துள்ள நாமல், அதிக இணைப்புகளை வழங்கிவிட்டு அதற்குரிய மின் உற்பத்தியினை செய்யாதவிடத்து மின் தட்டுப்பாடு ஏற்படுமென்பது வெளிப்படை உண்மையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று ஜனாதிபதிக்கும், அமைச்சரவை அந்தஸ்து அமைச்சர்களுக்குமிடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதன் போது மின் சிக்கல் தொடர்பில் பேசி முடிவெடுக்கப்படுமென தெரிவித்த அமைச்சர் நாமல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார விநியோகம் தொடர்பில் அமைச்சரவையும் மின்வலு அமைச்சரும் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில் அவை நெருக்கடியை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மின்தடைக்கு கடந்த அரசே காரணம்  -நாமல்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version