OIC இன் மனைவியை தாக்கி கொள்ளை.

களுத்துறை வடக்கு சிறு குற்றங்களுக்கான பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் குமாராவின் வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவியினை தாக்கிவிட்டு ஒரு கும்பல் இரண்டு தொலைபேசிகளையும் தங்க நகை ஒன்றையும் கொள்ளையிட்டு சென்றுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் T56 ரக துப்பாக்கிகளுடன் வருகை தந்த இனம் தெரியாத குழுவொன்று இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற வேளையில் பொலிஸ் அதிகாரி வீட்டில் இருக்கவில்லை எனவும் தாக்குதலில் அவரின் மனைவி காயமடைந்ததாகவும், சம்பவம் தொடர்பில் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version