12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைகொடுத்த பூசகர்!

தோஷத்திற்கு பரிகாரம் செய்வதற்க்காக அழைத்து வரப்பட்ட 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தொம்பே தேவாலயம் ஒன்றின் பூசகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

37 வயதுடைய நபர் ஒருவரே சந்தேகத்தின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பூசகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி தனது தந்தையிடம் கூறிய போதிலும், அவர் அதை புறக்கணித்துள்ளார் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி கூறியதை புறக்கணித்தமை தொடர்பில் சிறுமியின் தந்தையையும் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

மகளுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் தோஷத்தைப் போக்கி, பரிகாரம் செய்யவும், வீட்டிற்கு தெய்வீகப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்காகவும், தந்தை மகளை அழைத்துக்கொண்டு தொம்பேயில் அமைந்துள்ள குறித்த தேவாலயத்திற்கு சென்றதாகவும், பரிகார பூஜைகளுக்காக தேவாலயத்திற்குள் குறித்த சிறுமி தனியாக அழைத்து செல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைகொடுத்த பூசகர்!

Social Share

Leave a Reply