நடிகர் நெடுமுடி வேணு காலமானார்

கேசவன் வேணு கோபால் எனும் இயற்பெயரைக் கொண்ட நெடுமுடி வேணு உடல்நலக்குறைவு காரணமாக தனது 73வது வயதில் மரணமடைந்துள்ளார். 

மலையாள நடிகரான இவர் தனது நெடுமுடி என்ற ஊரின் பெயரை இணைத்து திரையுலகிற்காக நெடுமுடி வேணு எனப் பெயரை மாற்றிக் கொண்டார்.

பத்திரிகைத் துறையில் இருந்து1978 இல் சினிமாவில் கால்பதித்த இவர்  500 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளதுடன் மூன்று தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இயக்குநனாராக நடிகராக கதாசிரியராக சினிமாவில் 50 வருடங்களாக பணியாற்றியுள்ள இவர் தமிழில் இந்தியன், இந்தியன் 2, பொய் சொல்லப் போறோம், அந்நியன் மற்றும் சர்வம் தாளமயம் திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இவர் இறுதியாக மலையாளத் திரைப்படமான ஆணும் பெண்ணும் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். 

கடந்த சில நாட்களாக கொவிட் தொற்றுக்கு ஆளாகி மீண்டுவந்த நிலையில் உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே இவர் உயிரிழந்துள்ளார். 

சினிமாத்துறையினர் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருவதுடன், நடிகர் கமலஹாசன் இவரது சினிமா சாதனைகளைக் குறிப்பிட்டு தனது அஞ்சலியை தெரிவித்துள்ளார்.

நடிகர் நெடுமுடி வேணு காலமானார்

Social Share

Leave a Reply