யாழ்-கொழும்பு மோதல்

லங்காக பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றையா நாளின் இரண்டாம் போட்டியும், கண்டி, பல்லேகல மைதானத்தின் இறுதிப் போட்டியுமான ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய கொழும்பு அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றது. பத்தும் நிஸ்ஸங்க வேகமான ஆரம்பத்தை வழங்கினார். இருப்பினும் யாழ் அணி இணைப்பாட்டத்தை முறியடித்து அடுத்தடுத்து விக்கெட்களை கைப்பற்றி தமது கைவரிசையினை காட்டியது. டில்ஷான் மதுசங்க மற்றும் டுனித் வெல்லாளகே ஆகியோரின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. 12 ஓட்டங்களுக்குள் நான்கு விக்கெட்கள் கொழும்பு அணிக்கு வீழ்ந்தது.

20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களை கொழும்பு அணி பெற்று போராடக் கூடிய நிலையில் தமது துடுப்பாட்டத்தை நிறைவு செய்துள்ளது.

யாழ் அணி இன்று வெற்றி பெற்றாலே அடுத்த சுற்று வாய்ப்பு இலகுவாகும் என்ற நிலை காணப்படுகிறது. அதே போன்று கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணிக்கும் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது.

அணி விபரம்

யாழ் அணி
1 திஸர பெரேரா, 2 நிஷான் மதுஷ்க 3 ரஹ்மனுள்ள குர்பாஸ், 4 டுனித் வெல்லாளகே, 5 மஹீஸ் தீக்ஷண, 6 சொஹைப் மலிக் 7 நுவான் துஷார 8 சரித் அஸலங்க 9 டேவிட் மில்லர் 10 டில்ஷான் மதுசங்க 11 தௌஹித் ரிதோய்

கொழும்பு அணி –
1 லஹிரு உதார 2 பாபர் அஸாம், 3 பத்தும் நிஸ்ஸங்க, 4 நுவனிது பெர்னாண்டோ, 5 மொஹமட் நவாஸ், 6 இப்திகார் அஹமட் 7 சாமிக்க கருணாரட்ன, 8 ரமேஷ் மென்டிஸ், 9 லக்ஷான் சண்டகன், 10 நசீம் ஷா, 11 மதீஷ பத்திரன

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பத்தும் நிஸ்ஸங்கL.B.Wடுனித் வெல்லாளகே362570
பாபர் அஸாம்பிடி – டேவிட் மில்லர்டில்ஷான் மதுசங்க242121
லஹிரு உதார பிடி – மஹீஸ் தீக்ஷணமஹீஸ் தீக்ஷண292421
நுவனிது பெர்னாண்டோபிடி – மஹீஸ் தீக்ஷணடில்ஷான் மதுசங்க020300
இப்திகார் அஹமட்Bowledடுனித் வெல்லாளகே030600
மொஹமட் நவாஸ் ஹமட் நவாஸ்பிடி – தௌஹித் ரிதோய்   சொஹைப் மலிக்272031
சாமிக்க கருணாரட்ன  211810
ரமேஷ் மென்டிஸ்பிடி – பிடி – டேவிட் மில்லர்நுவான் துஷார171011
நசீம் ஷாRun Out 010200
லக்ஷான் சண்டகன்     
மதீஷ பத்திரன      
உதிரிகள்  03   
ஓவர்  20விக்கெட்  08மொத்தம்146   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
திசர பெரேரா01000700
மஹீஸ் தீக்ஷண04002101
டில்ஷான் மதுசங்க04002302
நுவான் துஷார04003701
டுனித் வெல்லாளகே03000902
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version