ஐரோப்பா கிண்ணம் – இங்கிலாந்து,ரொமேனியா அணிகள் வெற்றி

2024 ஆம் ஆண்டுக்கான ஐரோப்பா கிண்ண காற்பந்தாட்ட தொடரில் இன்று(17.06) நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து, ரொமேனியா அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

ஜேர்மனியில் நடைபெற்ற இங்கிலாந்து, சேர்பியா அணிகளுக்கிடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 1-0 என வெற்றி பெற்றுள்ளது. 13ஆவது நிமிடத்தில் பெலிங்ஹாம் அடித்த கோல் மூலம் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி அவ்வாறே போட்டியை நிறைவு செய்தது.

ரொமேனியா மற்றும் யுக்ரைன் அணிகளுக்கிடையிலான போட்டியில் 3-0 என ரொமேனியா அணி வெற்றி பெற்றுள்ளது. 29 ஆவது நிமிடத்தில் ஸ்டன்சி முதல் கோலை அடித்தார். அதன் பின்னர் 53 ஆவது நிமிடத்தில் மரின் பெற்றுக்கொடுத்த கோல் மூலமாக ரொமேனியா அணியின் வெற்றி உறுதியானது. 79ஆவது நிமிடத்தில் ஒரே மீண்டும் ஒரு கோலை பெற்று தனது அணியின் வெற்றியினை உறுதி செய்தார்.

Social Share

Leave a Reply