மழை தொடரும் வாய்ப்பு!

இலங்கையின் வடகிழக்கில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாட்டின் வானிலையைத் தொடர்ந்து பாதித்து வருவதாகவும், அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், மேற்கு, சபரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், திருகோணமலை மாவட்டத்திலும் 100 மி.மீ-க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் ஏற்படும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version