”நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” – முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ சேர்க்கை முறையை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் எனவும், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாநிலங்களே மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே, தமிழ்நாடு அரசு அதனைத் தொடர்ந்து மற்றும் ஒருமித்த குரலில் எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக, கிராமப்புறங்கள், அரசுப் பள்ளிகள், தமிழ் வழிப் பயிற்றுமொழிப் பின்னணிகள் மற்றும் சமூக – பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தமிழ்நாடு அரசின் நீண்ட நாள் கோரிக்கையான தேர்வை முழுமையாக ரத்து செய்யவும், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் ஆயூஷ் (AYUSH) படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அனுமதிக்குமாறு ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறேன்” என்று முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version