குஜராத்தின் play off வாய்ப்பை தடுத்து நிறுத்திய கொல்கத்தா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று(16.5) IPL இன் 60 ஆவது போட்டியாக ஈடன் கார்டென்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 29 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய கொல்கத்தா அணி ஆரம்பம் முதல் அதிரடியாக துடுப்பாடி 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 247 ஓட்டங்களை பெற்றது. இதில் பின் அலென் 93(35) ஓட்டங்களையும், அங்ரிஷ் ரகுவன்ஷி ஆட்டமிழக்காமல் 82(44) ஓட்டங்களையும், கமெரூன் க்ரீன் ஆட்டமிழக்காமல் 52(28) ஓட்டங்களையும் பெற்றனர்.

குஜராத் அணியின் பந்துவீச்சில் மொஹமட் சிராஜ், சாய் கிஷோர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷுப்மன் கில் 85(49) ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 57(35) ஓட்டங்களையும், சாய் சுதர்ஷன் ஆட்டமிழக்காமல் 53(28) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சுனில் நரைன் 2 விக்கெட்களையும், கமெரூன் க்ரீன், செளரப் தூபே ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இந்த போட்டியின் நாயகனாக சுனில் நரைன் தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version