வவுனியாவில் இன்று நான்காம் நாளாக தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. இன்று முதல் ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கின்றன. அத்தோடு அரச திணைக்கள ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றும் பணிகளும் ஆரபிக்கவுள்ளன.
மற்றைய சகல நிலையங்களிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் தொடர்ச்சியாக ஏற்றபப்ட்டு வருகின்றன. நீண்டநாள் நோயாளர்களுக்கு வவுனியா வைத்திய சாலையில் ஊசிகள் ஏற்றப்படவுள்ளன. மகாஇறம்பைக்குளம், காத்தார்சின்னக்குளம், கோவில்குளம் ஆகிய இடங்களுக்கும் இன்றைய தினம் தடுப்பூசிகள் வழங்கபபடவுள்ளன.
கிராமசேவையாளரிடம் விண்ணப்பபடிவத்தையும் , வரிசை இலக்கத்தையும் (டோக்கன்) பெற்றுக்கொண்டு தங்களுக்கான தடுப்பூசி நிலையங்களுக்கு செல்வதன் மூலம் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும்.
கிராமசேவையாளரிடம் விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து, வரிசை இலக்கத்தையும்(டோக்கன்) பெற்று காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிக்குள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியுமென வவுனியா மாவட்ட தொற்றுயியலாளர் வைத்திய கலாநிதி செ.லவன் வி தமிழுக்கு தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் தங்களுக்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கிராம சேவையாளரிடம் உறுதி செய்து வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் வரிசை இலக்கத்தை பெற்று ஊசிகளை போடலாம். பாடசாலைகளுக்கான தனி தனியாக நேரம் ஒதுக்கப்படவில்லையென வவுனியா மாவட்ட தொற்றியலாளர் வைத்திய கலாநிதி செ. லவன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் தங்கள் கிராமசேவகர் பிரவுகளில் வரிசை இலக்கத்தை (டோக்கன்) பெற்றுக் கொண்டு தங்கள் கிராமசேவையாளர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும். கட்டாயம் பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிலையத்தில்தான் ஊசிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றில்லை எனவும் சுகாதர தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அரச திணைக்களங்களை சேர்ந்தவர்கள் இன்று 10 ஆம் திகதி முதல் வுனியா காமினி மகா வித்தியாலயத்தில் தடுபூசிகளை பெற்றுக்கொள்ள முடியும். வவுனியா பிராந்திய சுகாதர திணைக்களத்தின் தொற்றுயில் பிரிவில் விண்ணப்பபடிவங்களை பெற்று கிராமசேவையாளரிடம் பூர்த்தி செய்து தங்களுக்கான தடுப்பூசிகளை வுனியா காமினி மகா வித்தியாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம். பிறமாவட்டங்களை சேர்ந்தவர்கள் திணைக்கள தலைவரின் கையொப்பத்தோடு ஊசிகளை பெற்றுகொள்ள முடியும். கிராமசேவகர் பிரிவுக்கான நிலையங்களிலும் ஊசிகளை பெற்றுகொள்ள முடியும்.
நீண்ட நாள் நோயுடையவர்களும், தொற்றா நோயுடையவர்களும் அவர்களுக்கான விசேட வைத்திய நிபுணரின் ஆலோசனையோடு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள முடியும். அவர்களுக்கான விண்ணப்ப படிவங்களை வைத்தியசாலையிலேயே பெற்று பூர்த்தி செய்து ஊசிகளை போட்டுக்கொள்ள முடியும்.
ஊசிபோடுதல் தொடர்பில் அறிவித்தல்கள் தொடர்ச்சியாக கிராம சேவையாளரூடாக வழங்கப்படுமெனவும், அறிவிக்கப்படாத பகுதிகள் மற்றும் வயது பிரிவுகள் தொடர்பிலும் கிராமசேவையாளர்கள் ஊடக அறிவித்தல்கள் வழங்கப்பபடுமெனவும் அவற்றினடிப்படையில் செயற்படுமாறும் வவுனியா மாவட்ட தொற்றியலாளர் வைத்தியகலாநிதி செ.லவன் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வி தமிழ் இணையத்தில் தொடர்ச்சியாக வவுனியாவில் தடுப்பூசிகள் ஏற்றப்படும் விபரங்களை தந்து வருகிறோம். எமக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே தகவல்களை தருகிறோம். 100% தகவல்களை வவுனியா மாவட்ட சுகாதார பணிமனை, தங்களுக்குரிய வைத்ய அதிகாரி பணிமனை கிராம சேவையாளர் ஆகியோரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். தொடர்ச்சியாக எமது இணையத்தை பார்வையிடுவதன் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
இன்றும் நாளையும் தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்களும், கிராம சேவகர் பிரிவு விபரங்களும் கீழுள்ள அட்டவணையில் காணப்படுகின்றன.
இன்று (10.09.2021) தடுப்பூசி வழங்கும் நிலையங்கள்
தடுப்பூசி வழங்கும் நிலையம் | கிராம சேவகர் பிரிவு |
வவுனியா காமினி மகா வித்தியாலயம் | அரச திணைக்களங்கள் |
வவுனியா மாவட்ட வைத்தியசாலை | நீண்டநாள் நோயுடையவர்கள் |
சைவப்பிரகாச மகளிர் கல்லூரி | கல்விசார் ஊழியர்கள் |
கோவில்குளம் இந்துக்கல்லூரி | கோவில்குளம் |
ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் மகா வித்தியாலயம் | காத்தார் சின்னகுளம் |
மகாறம்பைக்குளம் மகாவித்தியாலயம் | மகாறம்பைக்குளம் |
பூவரசங்குளம் வைத்திய சாலை | பூவரசங்குளம் பம்பைமடு செக்கடிப்பிலவு வேலங்குளம் சாலம்பைக்குளம் பாவற்குளம் படிவம் 04 பாவற்குளம் படிவம் 05 & 06 குருக்கள் புதுக்குளம் |
பாவற்குளம் வைத்தியசாலை | ராசேந்திரங்குளம் சூடுவெந்தபிலவு பாவற்குளம் படிவம் 02 |
சிதம்பரபுரம் வைத்தியசாலை | ஆசிகுளம், சமலங்குளம், வன்னிக்கோட்டம், சிதம்பரபுரம், சிதம்பரநகர்,கோமரசன்குளம், கல்நாட்டினகுளம், கல்வீரன்குளம், தரணிக்குளம், மதுராநகர் |
ஓமந்தை வைத்தியசாலை | நொச்சிகுளம் கள்ளிகுளம் சேமமடு பன்றிகெய்தகுளம் ஆறுமுகத்தான்புதுக்குளம் ஓமந்தை மகிழங்குளம் இளமருதங்குளம் |
நவ்வி வைத்தியசாலை | மருதமடு புல்மோட்டை |
செட்டிகுளம் வைத்தியசாலை | செட்டிகுளம் முகத்தான் குளம் கிறிஸ்தவகுளம் கன்கன்குளம் பாவற்குளம் படிவம் 09 முதலியார் குளம் ஆண்டியா புளியங்குளம் கந்தசாமிநகர் |
கணேசபுரம் வைத்தியசாலை | பெரியதம்பனை பெரியகட்டு கன்னட்டி பிரமநாலன்குளம் |
நேரியகுளம் வைத்தியசாலை | நேரியகுளம் சின்னசிப்பிக்குளம் மரதமடுவ பெரியபுளியங்குளம் |
மாமடு வைத்தியசாலை | மாமடு அக்போபுர மஹாகச்சகொடிய புதுபுளங்குலமா |
புளியங்குளம் வைத்தியசாலை | புளியங்குளம் வடக்கு புளியங்குளம் தெற்கு |
நெடுங்கேணி வைத்தியசாலை | நெடுங்கேணி வடக்கு நெடுங்கேணி தெற்கு |
கனகராயன்குளம் வைத்தியசாலை | கனகராயன்குளம் வடக்கு கனகராயன்குளம் தெற்கு மாங்குளம் சின்னடமபன் |
நைனாமடு வைத்தியசாலை | நைனாமடு அனந்தர்புளியங்குளம் பரந்தன் |
குழவிசுட்டான் நிலையம் | குழவிசுட்டான் மரையிலுப்பை |
ஒலுமடு அ.த.க பாடசாலை | ஒலுமடு மாமடு |
கற்குளம் நிலையம் | கற்குளம் மருதோடை பட்டிக்குடியிருப்பு ஊஞ்சல்கட்டி வெடிவைத்தகல்லு |
போகஸ்வெவ வைத்தியசாலை | பிரப்பன்மடுவ |
பரக்கும் மஹா வித்தியாலயம் | இரட்டைபெரியகுளம் அவுஷதப்பிட்டிய அலகல்ல கல்குடாமடு |
உலுக்குளம் வைத்தியசாலை | உலுக்குளம் ஏக்கர் 20,40,60 ஏக்கர் 400 |
மடுக்கந்த விகாரை | மடுக்கந்த மஹாமகிழங்குலம நெடுங்குளம |
நடமாடும் சேவை | அவரத்துலவா ரெங்கெத்கெம பூமடுவ ரக் 07 மரதன்மடுவ |
நாளை (11.09.2021) தடுப்பூசி வழங்கும் நிலையங்கள்
தடுப்பூசி வழங்கும் நிலையம் | கிராம சேவகர் பிரிவு |
வவுனியா காமினி மகா வித்தியாலயம் | அரச திணைக்களங்கள் |
வவுனியா மாவட்ட வைத்தியசாலை | நீண்டநாள் நோயுடையவர்கள் |
சைவப்பிரகாச மகளிர் கல்லூரி | கல்விசார் ஊழியர்கள் |
கணேசபுரம் மகா வித்தியாலயம் | மரக்காரம்பளை |
முருகனூர் அ.த.க பாடசாலை | சமனங்குளம் |
மறவன்குளம் மகா வித்தியாலயம் | ஈச்சங்குளம் |