சிம்பாவே அணியிடம் தோல்வியடைந்த இலங்கை அணி

🇱🇰😢 What Went Wrong? Sri Lanka Breaks Fans’ Expectations | Vimal & Rj Chandru

கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற ICC T20 உலகக்கிண்ணப் போட்டியில், இலங்கை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிம்பாப்வே அணி வெற்றி பெற்று தோல்விகளின்றி இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. இந்தியா, சிம்பாவே, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் தோல்விகளின்றி அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளன.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிசங்க அழுத்தமான சூழலிலும் நிதானமாக விளையாடி 62 ஓட்டங்களைச் பெற்றுக்கொண்டார். பத்தும் நிசங்க ஆட்டமிழந்ததும் தொடர்ச்சியாக விக்கெட்கள் வீழத்தப்பட இறுதி ஓவர்களில் எதிர்பார்த்த அளவிற்கு வேகமான ஓட்டங்களை பெற முடியாமல் போனது. பவான் ரத்நாயக்க 44 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். சிம்பாவே அணியின் பந்துவீச்சில் முஷரபாணி, பிரட் எவன்ஸ், க்ரேமி க்ரீமர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

179 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய சிம்பாப்வே அணி ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்தாலும், அணித்தலைவர் சிகந்தர் ரஸா மற்றும் பிரையன் பென்னெட் இணைந்து போட்டியின் நிலையை மாற்றினர். ரஸா 45 ஓட்டங்களையும், பென்னெட் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களையும் பெற்றதன் மூலம் சிம்பாப்வே அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ஓட்டங்களை பெற்று வெற்றியை உறுதி செய்தது. இலங்கை அணி சார்பில் டுஸான் ஹேமந்த 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version