2028 T20 உலகக்கிண்ண 12 அணிகள் தெரிவு

https://www.facebook.com/share/v/1BuEq4ZJ2M/?mibextid=wwXIfr

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2026 ஆம் ஆண்டிக்கான T20 உலகக்கிண்ண தொடரில் பங்குபற்ற 12 அணிகள் தெரிவாகியுள்ளன. இந்த வருட தொடரில் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. 2028ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகள் இணைந்து உலகக்கிண்ண தொடரை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளும் தெரிவாகியுள்ளன.

குழு A-இல் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் முன்னேறின.
குழு B-இல் இருந்து இலங்கை மற்றும் சிம்பாவே அணிகள் தகுதி பெற்றன.
குழு C-இல் இருந்து மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் முன்னேறின.
குழு D-இல் இருந்து தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் சுப்பர் 8 சுற்றை எட்டின.

அடுத்த 3 அணிகள் தரப்படுத்தல்கள் மூலம் தெரிவாகியுள்ளன. மார்ச் 9ஆம் திகதி வெளியிடப்படவுள்ள தரப்படுத்தல்களில் இடம்பிடித்துள்ள பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளே அந்த அணிகள் ஆகும். மார்ச் 09 வரை போட்டிகள் இல்லாத நிலையில், தரப்படுத்தல்களில் மாற்றங்கள் ஏற்படாது. ஆகவே இந்த மூன்று அணிகள் தெரிவாகியுள்ள.

மீதமுள்ள 8 இடங்களுக்கு கண்டங்களுக்கு இடையிலான போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் தெரிவாகும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version