லைசியம் வத்தளை 19 வயதிற்குட்பட்ட அணி அரை இறுதியில்

லைசியம் வத்தளை மற்றும் வித்யார்த்த கல்லூரி, கண்டி அணிகளுக்கிடையில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட 3 நாட்கள் Division 2 Tier A இன் காலிறுதிப்போட்டி நுவரெலிய ரதெல்ல மைதானத்தில் நடைபெற்றது. இதில் லைசியம் அணி இன்னிங்சஸ் மற்றும் 154 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய லைசியம் அணி 88.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 351 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஷலில பிரபஷ்ஷார ஆட்டமிழக்காமல் 83(161) ஓட்டங்களையும், டினோஷ் ஜெலோன் 56(51) ஓட்டங்களையும், ககன் பெரேரா 56(79) ஓட்டங்களையும், ப்ரவிஷ்க நதீன் 50(69) ஓட்டங்களையும் பெற்றனர்.

வித்யார்த்த கல்லூரி அணியின் பந்துவீச்சில் செனுல் ஹன்சஜ 4 விக்கெட்களையும், ஷெவான் மோசஸ், பேஷல சஹஸ்ரக ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய வித்யார்த்த கல்லூரி அணி 38 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து, 68 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் யஸ்மித்த திஸ்ஸாநாயக்க 26(44) ஓட்டங்களையும், அனுஹாஸ் ரணவீர 21(38) ஓட்டங்களையும் பெற்றனர்.

லைசியம் அணியின் பந்துவீச்சில் விதுன்ஷ விஜேரத்ன, தருஷ ரணசிங்க ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் டினோஷ் ஜெலோன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Follow On முறையில் துடுப்பாடிய வித்யார்த்த கல்லூரி அணி 60.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 129 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் செனுல் ஹன்சஜ ஆட்டமிழக்காமல் 26(54) ஓட்டங்களையும், அகலங்க தினுஜய 20(15) ஓட்டங்களையும், லிசந்து நிம்சித் 20(100), அனுஹஸ் ரணவீர 20(27) ஓட்டங்களையும் பெற்றனர்.

லைசியம் அணியின் பந்துவீச்சில் ரவிந்து விகசித்த 5 விக்கெட்களையும், சதில் டயாஸ் 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version