சஞ்சு அதிரடி. சென்னை அணிக்கு முதல் வெற்றி

சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கப்பிடல்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று (12.04) IPL இன் 18 ஆவது போட்டியாக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி 23 ஓட்டங்களினால் வெற்றி பெற்று 1 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கப்பிடல்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

முதலில் துடுப்பாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்றது. இதில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 115(56) ஓட்டங்களை பெற்று அவரின் 4 ஆவது IPL சதத்தை பூர்த்தி செய்தார். ஆயுஷ் மாத்ரே 59(36) ஓட்டங்களை பெற்று ரிட்டயர்ட் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

பந்து வீச்சில் அக்ஷர் படேல் 1 விக்கெட்டினை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 189 ஓட்டங்களை பெற்றது. இதில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 60(38) ஓட்டங்களையும், பத்தும் நிஸ்ஸங்க 41(24) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜேமி ஓவெர்ட்டன் 4 விக்கெட்களையும், அன்ஷுல் கம்பொஜ் 3 விக்கெட்களையும், கலீல் அஹமட், குர்ஜப்னீட் சிங், நூர் அஹமட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.

இந்த போட்டியின் நாயகனாக சஞ்சு சாம்சன் தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version