மீனவர்களை மீட்குமாறு முதமைச்சர் விஜய் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்!

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட ஆறு இந்திய மீனவர்களை விடுவிக்க ராஜதந்திரத் தலையீடு கோரி, சி. ஜோசப் விஜய் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இராமநாதபுரம் மண்டபத்தைச் சேர்ந்த அந்த மீனவர்கள், சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) கடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே 10 அன்று கைது செய்யப்பட்டனர். அவர்களது மீன்பிடிப் படகும் கைப்பற்றப்பட்டது.

54 இந்திய மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், 264 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய், அவர்களை விடுவித்து பாதுகாப்பாகத் திருப்பி அனுப்ப விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version