இலங்கையில் இந்திய மாணவர்கள் கராட்டே சாதனை

இருபத்து மூன்றாவது சார்வதேச ரென்ஷின் கிண்ண கராத்தே சம்பியன்ஷிப் இலங்கை, கண்டியில் இன்று நடைபெற்றது. கண்டி மாநகரசபை அரங்கில் நடைபெற்ற இந்த தொடரில் இந்தியா வீரர்கள் அபார சாதனைகளை படைத்துள்ளனர்.

20 நாடுகளை சேர்ந்தகனிஷ்ட வீரர்கள் இந்த சம்பியன்ஷிப் தொடரில் கலந்து கொண்டனர். ஜூனியர் அளவில் நடந்த மிக கடினமான போட்டியில் ZODO ( Karate, Kunfu, Silambam ), பிரிவுகளில் தனித்தனியே நடைபெற்றது, இந்திய அணி, தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டம், மூலனூர் கலைக்கோவில் வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் U.S.துர்கேஷ் கராட்டேயில் இறுதி போட்டியில் முதல் கிண்ணத்தை வென்றனர். அதேபோல் குங்க்பூ, சிலம்பம் ஆகிய போட்டிகளிலும் மாணவர்கள் S.தீக்சித், V.குருவிக்னேஷ் ஆகியோர் முதல் கிண்ணங்களை வென்றனர். மாபெரும் வெற்றி பெற்று முதல் கோப்பைகளை அள்ளிச்சென்ற மாணவர்களுக்கு கிண்ணங்கள் வழங்கப்பட்டன.

இலங்கையில் இந்திய மாணவர்கள் கராட்டே சாதனை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version