”இலங்கை பொருளாதாரம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது” – பிரதமர் தெரிவிப்பு!

அதிகாரப்பூர்வமாக ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) மேற்கொண்ட பயணத்தின் போது, இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய ”உலகளாவிய நெருக்கடிகள் மற்றும் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டிருந்தாலும் அரசு நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த முடிந்துள்ளது” என அந்நாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு தெரிவித்துள்ளார்.

லண்டன் நகரில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ஆகிய இருவரும் சுமார் ஆயிரம் இலங்கையர்களை சந்தித்து உரையாற்றினர்.

இந்த சந்திப்பின்போது, இலங்கையின் அரசியல் பண்பாடு “மாற்ற முடியாத வகையில் சிறந்த நேர்மறையான மாற்றத்தை நோக்கி நகர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

''இலங்கை பொருளாதாரம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது'' - பிரதமர் தெரிவிப்பு!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version