அம்பாறையில் கோர விபத்து இருவர் பலி!

அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிராக்டர் சந்தி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

புத்தங்கல பகுதியில் இருந்து ஹோல்மங்கல நோக்கி பயணித்த டிப்பர் லொறி ஒன்று, பாலிகா சுற்றுவட்டப் பகுதியில் இருந்து அம்பாறை பொது வைத்தியசாலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் நேற்று இரவு மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version