தொடரை சமன் செய்தது இலங்கை

விடுமுறை நாள் மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு வழங்கிய இலங்கை அணி. மேற்கிந்திய அணிக்கெதிராக அதிரடி.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இன்று(14.06) T20 தொடரின் 2 ஆவது போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி 37 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமநிலை செய்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 194 ஓட்டங்களை பெற்றது. இதில் கமில் மிஷார ஆட்டமிழக்காமல் 61(40) ஓட்டங்களையும், தசுன் ஷானக 58(24) ஓட்டங்களையும், குஷல் மென்டிஸ் 31(19) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஷமர் ஜோசப் 3 விக்கெட்களையும், மத்தியூ போர்ட் 2 விக்கெட்களையும், ஷமர் ஸ்ப்ரிங்கர் 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 18.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றது. இதில் ரோவ்மன் பவல் 43(26) ஓட்டங்களையும், ஷிம்ரோன் ஹெட்மயர் 36(26) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், டுனித் வெல்லாலகே 2 விக்கெட்களையும், மஹீஸ் தீக்ஷண 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த போட்டியின் நாயகனாக தசுன் ஷானக தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version