2026 FIFA உலகக்கிண்ணத்தின் மூன்றாம் நாள் போட்டிகளில் பரபரப்பும் ஆச்சரியங்களும் நிறைந்தன. குழு B போட்டியில் கத்தார் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் 1-1 என சமநிலை பெற்றன. சுவிட்சர்லாந்து அணிக்காக எம்போலோ 17 ஆவது நிமிடத்தில் பெனால்டி மூலம் முதல் கோலை பெற்றுக்கொடுத்தார். பெரும்பகுதி நேரம் முன்னிலையில் இருந்த போதிலும், 94 ஆவது நிமிடத்தில் கத்தாரின் கௌக்கி கோல் அடித்து போட்டியை சமநிலை செய்தார். உலகக்கிண்ண வரலாற்றில் கத்தார் தங்களின் முதல் புள்ளியைப் பதிவு செய்தது.
குழு C-இல் பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற பிரேசில் – மொரோக்கோ மோதல் 1-1 என முடிவடைந்தது. மொரோக்கோ அணியின் சாய்பரி 21 ஆவது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை பெற்றுக்கொடுத்தார். 32 வினிசியஸ் ஜூனியரின் ஆவது நிமிடத்தில் அபார கோலால் பிரேசில் தோல்வியிலிருந்து தப்பித்தது.
அதே குழுவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஸ்கொட்லாந்து, ஹைட்டியை 1-0 என வீழ்த்தி 36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கிண்ணத்தில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ஜோன் மெக்கின் 29 ஆவது நிமிடத்தில் அடித்த கோலே வெற்றியை உறுதி செய்தது. இந்த வெற்றியால் ஸ்கொட்லாந்து குரூப் C புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்குச் சென்றுள்ளது.
குரூப் D போட்டியில் அவுஸ்திரேலியா துருக்கியை எதிர்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 27 ஆவது நிமிடத்தில் இரன்குண்டா கோல் அடித்து முன்னிலை பெற்றுக்கொடுத்தார். 75 ஆவது நிமிடத்தில் மெட்கால்ப் மேலும் ஒரு கோல் சேர்த்து 2-0 வெற்றி பெற்றது.
