திருமலை ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் – சிவில் சமூக அமைப்புகளுக்கும் இடையிலான செயலமர்வொன்று இன்று (20/01) திருகோணமலையில் இடம்பெற்றது.

‘மனித உரிமைகள் கண்காணிப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றிணைந்த பிரவேசம்’ என்ற தொனிப்பொருளில் இச்செயலமர்வு இடம்பெற்றது.

ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து சமூகத்திற்கு ஏற்படக்கடிய விளைவுகள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பிலான விழிப்புணர்வு மற்றும் சமூகத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது தொடர்பிலான பிரச்சனைகள் இதன் போது ஆராயப்பட்டன.

திருகோணமலை சர்வோதயம் பிரதான மண்டபத்தில் ஊடக பயிற்றுவிப்பாளர் ஊடகவியலாளருமான சீ.தொடாவத்த மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் இணைப்பாளரும் மனித உரிமைகள் பாதுகாப்பு ஆய்வாளர் ஊடகவியலாளர் பிரதீபன் மற்றும் ஆய்வாளர் லஹிரு ஆகியோர் தலைமையில் இச்செயலமர்வு இடம்பெற்றது.

(திருகோணமலை நிருபர்)

திருமலை ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version