ஆலய புனரமைப்பு பணிகளுக்கு நிதியுதவி

மலையகத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆலயங்களுக்கு புனர்நிர்மான பணிகளுக்காக நிதியுதவககான கடிதங்கள் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானினால் வழங்கப்பட்டது.

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார், கொட்டகலை முத்து விநாயகர், பூண்டுலோயா ஸ்ரீ சித்தி விநாயர், மற்றும் வட்டகொட உள்ளிட்ட நான்கு ஆலயங்களுக்கு நிதி வழங்குவதற்காக கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தலைமையில் ஹட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து மேலும் ஆலய புனர்நிர்மான பணிகளுக்காக சுமார் 250 இலட்சம் ரூபாய்களை பெற்றுக் கொடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஆலய புனரமைப்பு பணிகளுக்கு நிதியுதவி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version