இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களில் கொவிட் 19 தொற்று உறுதியான பரீட்சார்த்திகளுக்கு பிரத்தியேக பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய இவ்வாறு 108 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் இந்த முறை நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 40 ஆயிரத்து 508 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.