தயா மாஸ்டருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில், தடைசெய்யப்பட்ட அமைப்பான தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டமைக்கு தயா மாஸ்டருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (25/01) வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தயா மாஸ்டருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version