இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட்டு கலந்துரையாடியுள்ளார். அதன்போது தங்களது தேவைகள் தொடர்பில் தமிழ் அரசியல் கைதிகல் அமைச்சர் நாமலிடம் சில கோரிக்கைகளை முன் வைத்ததாக அறிய முடிகிறது. அவர்களது கோரிக்கைகள் தொடர்பில் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை, தமிழ் அரசியல் கைதிகள் பார்வையிட வேண்டுமென கடிதம் மூலம் கேட்டதற்கிணங்க இன்று இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
கடந்த 12 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதற்கும், அமைச்சர் நாமலின் விஜயத்துக்கும் தொடர்புகள் இருப்பதாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இரண்டும் வேற வேறு விடயங்களாகவே கருதப்படுகின்றன.