எரிபொருள் விலையேற்றம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையினை அதிகரிக்கவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.


92 ஒக்டேனின் விலையினை 7 ரூபாவால் அதிகரித்து 184 ரூபாவாகவும், ஓட்டோ டீசலின் விலையினை 3 ரூபாவால் அதிகரித்து 124 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணையின் விலை அதிகரித்துள்ளமையே இந்த விலையேற்றத்துக்கு காரணம் என நம்பப்படுகிறது.


இதுவரை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலையேற்றம் தொடர்பில் எந்த அறிவித்தலையும் வெளியிடவில்லை. ஆனாலும் விலையேற்றத்துக்கான வாய்ப்புகள் இருப்பதாகவே நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

எரிபொருள் விலையேற்றம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version