வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை செய்து வருகின்றது. அதன் முதற் கட்டமாக நேற்று 20 குடும்பங்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
50 குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை முதற் கட்டமாக தாங்கள் வழங்கவுள்ளதாகவும், குறித்த பொதிகள் ஓரிரு நாட்களில் வழங்கப்படும் எனவும் வவுனியா இந்து இளைஞர் சங்கத்தினர் தெரிவித்துள்னர். தங்களோடு இணைந்து நிவாரண பொதிகளை வழங்க ஆர்வமுள்ளவர்கள் வழங்க முடியுமெனவும் தெரிவித்துள்ளனர்.