இரவில் ஒளிரவிடப்படும் மின் விளக்குகளை நிறுத்தி வைக்குமாறு நிதியமைச்சர் பசில் ரஜாபக்ஷ இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களிடமே இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.
மின்சாரத்தை சேமிக்கும் முகமாக இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். இம்மாதம் 31 ஆம் திகதி வரை இந்த நடைமுறையினை செயற்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அவர் கடிதம் மூலமாக அறிவித்துள்ளதாக அந்த கட்சியின் பொது செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறையோடு வேறு மார்க்கங்களில் மின் பாவனை குறைப்புக்கான வழிகள் காணப்படுமாயின் அவற்றையும் நடைமுறைப்படுத்துமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.