வெளிநாடுகளில் பணிபுரியும் பணியாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்பும் போது ஒரு டொலருக்கு மேலதிகமாக 38 ரூபாவினை வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 10 ரூபா மேலதிக கொடுப்பனவாக வழங்கப்பட்ட நிலையில், இலங்கை மத்திய வங்கி டொலருக்கான இலங்கை பெறுமதியினை அதிகரித்துள்ளது. அதனை தொடர்நது தற்போது இந்த அதிகரிப்பு தொடர்பான அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அரச வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பண பரிமாற்று முறைகளூடாக பணப்பரிமாற்றம் செய்வதன் மூலமே இந்த அதிகரித்த பணப்பெறுமதியினை பெற முடியும்.