கொழும்பில் தொடரும் இரவு போராட்டம் – வீடியோ

கொழும்பின் பல பகுதிகளிலும் இன்றும் இரவு போராட்டங்கள் பல பகுதிகளிலும் இடம்பெறுகின்றன. இலங்கையின் பல பகுதிகளிலும் இவ்வாறு நடைபெற்றாலும், கொழும்பில் அதிகமாக இடம்பெறுகின்றன.

கொழும்பின் கொள்ளுப்பிட்டி பகுதியில் சற்று முன்னர் (இரவு 10.30) மணியளவில், கொள்ளுப்பிட்டி பகுதியில் பெரும் திரளான இளைஞர்கள் பேரணியாக வீதியில் நடந்தும், வாக்னங்களில் சென்றும் அரச எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

கோஷங்களை எழுப்பியும், வாகனங்களில் ஹோர்ன்களை ஒலிக்க செய்தும் தங்களது எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே காலிமுக திடலிலும், ஜனாதிபதி செயலக முன்றலிலும் பெரும் திரளான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடியோ இணைப்பு கீழுள்ளது

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version