முக கவச கட்டுப்பாடு நீக்கம்

இலங்கையில் நேற்று (18.04) நடைமுறைக்கும் வரும் வகையில் முக கவசம் அணிவதில் கட்டுப்பாடு தளர்க்கப்பட்டுள்ளதாக சுகாதர அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார். பொது போக்குவரத்து பாவனைகளின் போதும், மூடிய அரங்ககங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் போது முக கவசம் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அறிவிப்புகள் எவ்வாறு வந்தாலும் தமது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்வது அவரவரது கடமை. முக கவசம் தேவையில்லை என்பதற்காக கவனமின்றி நடந்து கொள்ளாமல், தேவையான இடங்களிலும், தேவையான நேரங்களிலும் பாதுகாப்புக்காக முக கவசம் அணிவதன் மூலம் ஆபத்தான தொற்றுகளில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.

கொரோனா தொற்று 100 சதவீதம் இல்லாமல் போகவில்லை என்பதனையும், அண்மையில் இந்தியாவில் புதிய திரிபு கண்டுபிடிக்கப்பட்டதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

முக கவச கட்டுப்பாடு நீக்கம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version