கொழும்பில், பலக்லைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று(24.04) ஏற்பாடு செய்திருந்த போராட்டம் மற்றும் பேரணி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு, பொரளை விஜயராமாவில் அமைந்துள்ள வீட்டினை முற்றுகையிட்டுள்ளது.
இன்று மதியம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னதாக ஆரம்பித்த பேரணி மருதானை ஊடக, புஞ்சி பொரளை சென்று அங்கிருந்து பொரளையிலுள்ள பிரதமர் வீட்டை செட்ன்றடைந்தது. கொழும்பு ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் பகுதிகள் முழுமையாக மூடப்பட்டமையினால் பலகலை கழக மாணவர்கள் திட்டத்தை மாற்றி பிரதமர் வீட்டை முற்றுகையிட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
பிரதமரின் வீட்டின் முன்பதாக அமைக்கப்பட்டிருந்த தடைகளை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் தடையினையும் தாண்டி அகற்றிய மாணவர்கள் பிரதமரின் வீட்டு மதிலில் ஏறி நின்று கோஷங்களை எழுப்பியதோடு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த கூடார முகட்டில் கருப்பு கொடிகளை ஏற்றி எதிர்ப்பினை வெளியிட்டனர்.
பிரதமரின் வீட்டுக்கு முன்னாள் போராட்டத்தை நடாத்தி பின்னர் அங்கிருந்து காலி முகத்திடலை நோக்கி நகர்ந்த அவர்களது போராட்டம் தற்போது காலிமுகத்திடலை செட்ன்றடைந்துள்ளது.