மரண அறிவித்தல் – அமரர் சு.பூபாலசிங்கம் (ஆசிரியர்)

அமரர் சுப்பிரமணியம் பூபாலசிங்கம் (ஆசிரியர்)

இறப்பு – 25.03.1940
இறப்பு – 19.09.2021


யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வவுனியா கோவில்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட, ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியரும், விரிவுரையாளருமான அமரர் சுப்பிரமணியம் பூபாலசிங்கம் அவர்கள் 19.09.2021 அன்று வவுனியா வைத்தியசாலையில் காலமானார்.
அன்னார் சுப்ரமணியம், பவளம் ஆகியோரின் மகனும், பரமானந்தம், செல்வபாக்கியம்(மணி அக்கா) ஆகியோரின் மருமகனும் ஆவார்.
அன்னார் ஆனந்தலக்சுமியின் அன்பு கணவரும், அன்புச்செல்வி கஜேந்திரன்(வவுனியா பல்கலைகழகம்), பிரணவன் (தபாலதிபர், வவுனியா) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும் ஆவார்.
காலஞ்சென்ற பாலசிங்கம், தர்மகுலசிங்கம்(கோண்டாவில்), மகிழராஜசிங்கம் (பிரான்ஸ்), ஆகியோரின் சகோதரனும், சற்குணம் கஜேந்திரன், தனுஷ்கா பிரணவன் ஆகியோரின் மாமனாரும், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலய மாணவிகளான பிருத்திகா, திருந்திகா, திவ்சிகா. மிதுசிகா மற்றும் ஆர்திக்சன் ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.

மரண அறிவித்தல் சி. பூபாலசிங்கம் (ஆங்கில ஆசிரியர்) வவுனியா:

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல் குடும்பத்தினர்

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version