பிரதமர், அமைச்சர்கள் வரக்கூடாது. நாங்கள் வாரோம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் சமூகமளிக்காவிட்டால் ஜனாதிபதியினை சந்திக்க தயாரென அரசிலிருந்து விலகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது. ஆளும் பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 40 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இந்த சந்திப்பிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுமென இந்த சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் சகல கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக ஜனாதிபதியுடன் நாளை(29.04) சந்திப்புக்கான அழைப்பும் விடப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவது தொடர்பிலான கலந்துரையாடலில் இந்த கோரிக்கையினை ஏற்றாலே சந்திப்பதென முடிவெடுக்கபப்ட்டுள்ளது.

பிரதமர், அமைச்சர்கள் வரக்கூடாது. நாங்கள் வாரோம்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version