ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்கவின் கொழும்பிலுள்ள வீட்டின் முன்பாக இன்று காலை முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பிரதி சபாநாயகருக்கு ஆதரவாக வாக்களித்தமை, அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்து அவருக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெறுகிறது.
நேற்றைய தினம்(06.05) தனக்கெதிராக போராட்டம் நடாத்தப்படவுள்ளதாக ரணில் விக்ரம்சிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். தான் போராட்டங்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
தேசிய கொடிகளுடனும், பதாதைகளை ஏந்திய வண்ணமும், போராட்டக்காரர்கள், அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.