நிபந்தையின் கீழ் இடைக்கால அரசுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார்

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி, நாட்டில் தற்போது நிலவும் பாரதூரமான தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள முன்மொழிவுகள் தொடர்பில் கவனத்தை செலுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினாலும் முன்வைத்துள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் வேலைத்திட்டம் தற்போதைய தேசிய நெருக்கடியைத் தீர்ப்பதற்குமான ஒரு அடிப்படைத் தேவையாகக் கருதுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக மக்களின் பாரிய பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையில் இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி தனது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று(07.05) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒன்றுகூடியதோடு,தற்போது முகம் கொடுக்கும் நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்பது குறித்து நீண்ட கலந்துரையாடலும் இதன் போது இடம் பெற்றது.

நிபந்தையின் கீழ் இடைக்கால அரசுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version