ஒரு வாரத்துக்கு போராட்டம்

நாளையதினம் முதல் ஒரு வாரத்துக்கு தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்ளின் இணைப்பு நிலையம் அறிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த விடயங்களை அந்த சங்கம் அறிவித்துள்ளது.

அவசரகால சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளமைக்கு கடுமையாக தமது எதிர்பார்ப்பினை வெளியிட்டுள்ளனர். 17 ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படும் வரை போராட்டம் தொடருமெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெறுமெனவும், 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அடுத்த கட்ட போராட்டம் தொடர்பில் முடிவெடுக்கப்படுமென இலங்கை வங்கி ஊழியர் சங்கம் வி மீடியாவுக்கு தெரிவித்துள்ளது.

ஒரு வாரத்துக்கு போராட்டம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version