சபாநாயகரின் நிலைப்பாடு தொடர்பில் மனோ MP சூட்சம கருத்து

ஐக்கிய மக்கள் கூட்டணி பாராளுமன்றத்துக்கு சமர்பித்ததுள்ள விடயங்கள் தொடர்பில் தற்போதுவரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

அரசாங்கத்துக்கும், பிரதமருக்கும் எதிராக கையளித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைகள் சபையின் பத்திரத்தில் உள்ளடக்கியுள்ளதாக தெரிவித்துளளார். அத்தோடு ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை இன்னமும் ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்கப்படவிலை என்பதனை வெளிப்படுத்தியுள்ளார்.

சபாநாயகர் முதலில் அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதில் முனைப்பாக இருக்கிறார் என்பது இந்த தகவலின் மூலமாக தெளிவாகின்றது. ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதில் தாமதம் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பது போலவே தென்படுகிறது.

ஐஐக்கிய மக்கள் கூட்டணி சமர்பித்த 21ம் திருத்த யோசனை, சட்ட வரைவாளர் குழுவிற்கு அனுப்பி வைக்கபப்ட்டுள்ளதாக மேலும் மனோ MP தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் நிலைப்பாடு தொடர்பில் மனோ  MP சூட்சம கருத்து
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version