மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தாக்கப்பட்டார்

மேல்மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட உதவி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று கொழும்பு, கங்காராம, பேர ஆற்று பகுதியில் போராட்ட குழு ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளது.

“யார் எம்மை அடிக்க சொன்னது” என்ற கோஷங்களோடு அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. கைகளினாலும், பொல்லுகளினாலும் அவர் மீதான தாக்கல் மேற்கொள்ளப்பட்டது,

அவருடையன வாகனமும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது. நேற்று காலிமுக திடல் மற்றும் அலரி மாளிகை ஆகிய இடங்களில் போராட்டதில் ஈடுபட்டவர்கள் மீது அரசாங்க சார்பாளர்கள் தாக்குதல் நடாத்தும் போது நடவடிக்கைகள் எடுக்காமல் அதற்கு ஆதரவாக இருந்தார் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பப்ட்டு வந்தன.

அதன் காரணமாக தேசபந்து தென்னகோன் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தாக்கப்பட்டார்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version