இலங்கை கால்பந்து பயிற்றுவிப்பாளர்கள் இலங்கைக்கு வந்தனர்

இலங்கை கால்பந்து அணிக்காக நியமிக்கப்பட்டுள்ள பயிற்றுவிப்பாளரான இங்கிலாந்து, மன்செஸ்ட்டர் சிட்டி முன்னாள் வீரர் அன்று மொரிசன் மற்றும் உதவி பயிற்றுவிப்பாளரான இங்கிலாந்து மில்வோல் கழக முன்னாள் வீரர் கீத் ஸ்டீவன்ஸ் ஆகியோர் நேற்று(16.05) மாலை நாட்டை வந்தடைந்தனர்.

இலங்கை கால்பந்து அணியின் முகாமையாளர் ஹரின் ரட்நாயக்க மற்றும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் போட்டிகளுக்கான தலைமையதிகாரி ஆஸிப் அன்வர் ஆகியோர் இரண்டு பயிற்றுவிப்பாளர்களையும் வரவேற்றுள்ளனர்.

அன்று மொரிசன் ஸ்கொட்லாந்தில் பிறந்து இங்கிலாந்தின் கழகங்களுக்காக விளையாடிய வீரர். 2015 ஆம் ஆண்டிலிருந்து வேல்ஸ் கழகமான நொமாட்ஸ் கழகத்துக்கு பயிற்றுவிப்பு வழங்கியுள்ளார்.

கீத் ஸ்டீவன்ஸ் இங்கிலாந்தில் பிறந்து இங்கிலாந்து கழகமான மில்வோல் கழகத்துக்கு நீண்ட நாட்களாக விளையாடிய வீரர். அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த இவர், அவுஸ்திரேலியா கழகங்களுக்கு பயிற்றுவிப்புகளை வழங்கியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version