பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு குறைந்த விலையில் எரிபொருள் நிரப்பப்பட்ட வீடியோ காட்சியினை நியுஸ் பெ(f)ஸ்ட் செய்தி சேவை வெளியிட்டிருந்தது.
குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில் “மக்களினால் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கோபத்தையும், வெறுப்பையும் என்னால் உணர முடிகிறது. ஆனால் எந்த கட்சி சேர்ந்தவர்களுக்கும் அவ்வாறு குறைந்த விலையில் எரிபொருள் வழங்கபபடவில்லை” என வலுசக்தி அமைச்சர் ட்விட்டர் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
நேற்று இரவு நாரஹேன்பிட்டி எரிபொருள் நிலையம் ஒன்றில் வாகனம் ஒன்றுக்கு எரிபொருள் லீட்டர் 121.19 ரூபாய்க்கு நிரப்பியதாக செய்தி வெளியாகியிருந்தது.