பாணந்துறை, அத்துளுக்கமையில் காணமல் போய் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவுக்கு தனது அஞ்சலிகளை தெரிவித்துள்ள ஜனாதிபதி இது “ஈவிரக்கமற்ற கொலை” என ட்விட்டர் செய்தில் குறிப்பிட்டுள்ளார்.
“ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன்.இந்த கொடூர குற்றத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க நான் உறுதியளிக்கிறேன்.சிறுமி ஆயிஷா சுவர்க்கம் செல்ல எனது பிரார்த்தனைகள்” என ஜானதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இரங்கல் செய்தியில் தெரிவித்த்துள்ளார்.
தொடர்புடைய செய்தி