13 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த அவரது குடும்பத்தினர்.

13 வயதான சிறுமி ஒருவரி வன்புணர்வு செய்த சம்பவம் ஒன்று மொனராகலை, எதிமலே பகுதியில் நடைபெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியை அவரின் தாத்தா, சிறுமியின் மாமனார்(தாயின் தம்பி), சிறுமியின் மூத்த சகோதரர் ஆகியோர் தொடர்ச்சியாக வன்புணர்வு செய்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதனை தொடர்ந்து அவர் வைத்தயசாலையில் பரிசோதிக்கப்பட்ட வேளையில் கர்ப்பமாகியுள்ளமை தெரியவந்துள்ளது. மொனராகலை மருத்துவ விசாரணை அதிகாரியிடம் சிறுமி மேலதிக விசாரணைகளுக்காகவும், சிகிச்சைக்காவும் கையளிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் சகோதரனை கைது செய்துள்ள பொலிஸார், மற்றைய இருவரையும் கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

அண்மைய நாட்களில் சிறுமிகளது துஸ்பிரயோகம் தொடர்பான சம்பவங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. பிள்ளைகளுக்கு பெற்றோர் பாலியல் தொடர்பான விடயங்களையும், அவர்களுக்கான அறிவுறுத்தல் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் அறிவுரைகளை வழங்குவது கட்டாயம். அதன் மூலமாகவே தங்களது பிள்ளைகளை பாதுகாக்க முடியும்.

13 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த அவரது குடும்பத்தினர்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version