காஸ் விநியோகம் இன்று இல்லை

லிற்றோ சமையல் எரிவாயு விநியோகம் இன்று இடம்பெறாதென லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த கப்பல் ஒன்றுக்காக காத்திருப்பதாகவும், அது வருகை தந்ததும் உடனடியாக விநியோகம் ஆரம்பிக்கப்படுமெனவும் அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னர் எரிவாயு கப்பல் ஒன்று வருகை தந்திருந்தது. அதில் கொண்டுவரப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொழும்பு, கம்பஹா ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் கொழும்பு, கம்பஹா பகுதிகளில் வரிசை தொடர்கிறது.

அடுத்து வரும் மூன்று வாரங்கள் மிக மோசமாக அமையுமெனவும், எரிபொருள், சமையல் எரிவாயு போன்றவற்றை சிக்கனமாக பாவிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை கவனத்தில் கொண்டு சிக்கனமாகவும், தேவையான முன் ஏற்பாடுகளுடன் மக்கள் நடந்து கொள்வது நன்மை பயக்கும்.

காஸ் விநியோகம் இன்று இல்லை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version